In a sudden spurt of enthusiasm- Here goes,ஆங்கிலத்துக்கு இணையான தமிழ்சொற்களை கண்டுபிடிப்பது மிக இனிமையான பொழுதுபோக்கு. "rather" என்ற சொல்லுக்கு சொல்லப்போனால் என்று தமிழாக்கம் தரலாம். " I would rather drink a coffee now instead of tea later" என்பதற்கான தமிழாக்கம் "பேசாமல்,பின்பு டீ குடிப்பதற்கு பதிலாக ,இப்பொழுதே காபி குடித்து விடலாம்." இங்கே rather "பேசாமல்" என்று உபயோகிக்க படுகிறது.
நேற்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொண்டபோழுது பக்கத்தில் நின்ற மினி பஸ்சின் மீது "சிற்றுந்து" என்று எழுதபற்றிந்திருந்ததை கண்டேன் . அப்பொழுதுதான் ஏன் பஸ்ஸை பேருந்து என்று அழைக்கிறார்கள் என்பது புரிந்தது. இதில் "உந்து" என்பது வேர்சொல் (root word?). ஆனால் உந்துதல் என்பது "stimuli" or "acceleration" or "encouragement". ஒரு வாகனம் முன்னால் உந்திசெல்வதால் உந்து என்று சொல்கிறோம். பெரிதாக இருப்பதால் பேருந்து என்றும், சிறிதாக இருந்தால் சிற்றுந்து என்று கூறுகிறோம். இது "noun from a verb"க்கு நல்ல எடுத்துக்காட்டு. எனக்கு இன்னும் லேப்டாப் என்பதின் சுத்த தமிழ் வார்த்தை தெரியாது. மேலே சொல்லப்பட்ட வகையில் யோசித்தால்" மடிமூடி" என்று தமிழாக்கம் தரலாம்.
இன்னும் பல தமிழ்வார்தைகளுக்கு மிகச்சரியான ஆங்கில வார்த்தைகள் இருந்தாலும் அவை என்னவோ தமிழில் ஒலிப்பதுபோல் ,தோன்றுவதுபோல் ஒலிப்பதும் தோன்றுவதுமில்லை. ஒரு சிலநாள் முன்னால் தியானம் மோனம் என்பதற்கு நிகரான ஆங்கில வார்த்தையை என்னால் பல நேரம் முயற்ச்சி செய்தும் யோசிக்க முடியவில்லை. எழிதாக "A state of deep concentration", or "profound passion" என்று சொல்லலாம். ஆனால் "it does not ring the same bell". இந்த உபயோகத்திற்கும் இணையான தமிழ்ப்ப்ரயோகம் என்ன என்பதும் தெரியவில்லை . "தலையில் மணி ஒலிக்கிறது" என்று சொல்லலாமா அல்லது "காதில் மணி அடிக்கிறது " என்று சொல்ல வேண்டுமா என்பது தெரியலவில்லை.
ஒரு சில வார்த்தைகளை "onomatopoeic words" என்று கூறுவார்கள். அந்த
வார்த்தைகளை கூறும் பொழுது அவை எந்த செயலை குறிக்கின்றன என்பது
தெரியவரும். "buzz of a bee", "Whirr of the washing machine", "babble/gurgle of the flowing
stream" - இவை அனைத்தும் அந்தந்த ஒலிகளை நினைவுக்கு கொண்டு
வருங்கின்றன . தமிழிலும் இதை காணலாம் "தேனீக்களின் ரீங்காரம்" "சலசல
என ஓடும் நதி" "சல சல என என்ன பேச்சு ? ". இங்கே சல சல என்பது "babble"
என்பதின் மிகச்சரியான தமிழாக்கம். It feels quite the same, doesn't it?
While one can potter around, botch up, splatter and flatter in English, தமிழில்
தில்லாலங்கடியாகவும் , குறுக்கெழுத்து புதிர் போடும் திறமைசாலியாகவும் இருக்கலாம்.
ஒவ்வரு வார்த்தையும் ஒவ்வரு மொழியின் அழகை கண் முன்னால் நிருதிக்காட்டும். கம்ப ராமாயணம் தெரியாவிட்டாலும் ,
அந்த அழகை ரசிக்கும் அளவுக்கு ஒரு மொழியை தெரிந்து கொண்டால் நம் மொழிப்பற்றை நினைத்து நாம் பெருமை கொள்ளலாம்,என்பது என் தாழ்மையான கருத்து.
4 comments:
[பேசாமல்,பின்பு டீ குடிப்பதற்கு...] The பேசாமல் is more a figure of speech than being used in the written form. Anyway, certain structures are highly implied. Doesn't map easily from one language to another. I was looking for a parallel word to blood in English. Tamil has ரத்தம், குருதி, உதிரம், but I cannot recall parallels in English.
And btw, car is மகிழ்வுந்து.
தியானம் மோனம் - reflective rapture. :-) [the meter doesn't reflect in the translation though)
laptop - மடிக்கணினி or குறுகணிணி (maybe Sujatha translations) or literally மடிமேலினி. :-D
Ah, reflective rapture sounds better actually! :)
madimelini :D sounds like a heroine name in Kalki's historical novels :)
I never knew it was Magizhvundhu! I wonder what they will call a "time traveler" in the future!
தியானம் மோனம் - trance is a single word that almost captures the meaning.
//லேப்டாப் என்பதின் சுத்த தமிழ் வார்த்தை தெரியாது. //
மடிக்கணினி என்பது புழங்கும் சொல்.
'கணினி' is quite a literal translation of 'computer'. Makes one thing how outdated that name for the system is itself kinda outdated.
மகிழுந்து is a translation of pleasure car (the etymology of which is also a vignette of the past: a pleasure vehicle as opposed to a business vehicle). ப்ளெஸர் is still how many rural old timers may refer to it.
Even within a language very rarely do we find 'exact' synonymns. If we persist digging into the etymology and usage there is often a shade of difference. So, across languages/cultures the chances of 'exact' match are going to be scarce.
Nice blog/post.
Post a Comment